டெல்லி வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி கவுன்சிலரின் இடங்களில் சோதனை

0 1149

டெல்லி வன்முறையில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனின் இடங்களில் முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளன.

கலவரத்தின் போது கொடூரமாக கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக உடற்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது.  கவுன்சிலர் தாஹிர் உசேன் வீட்டு மாடியில் இருந்த கும்பல், கற்களை வீசி தாக்கி கொலை செய்ததாக அன்கிட் சர்மாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் தாஹிர் உசேன் வீட்டு மாடியில் பெட்ரோல் குண்டுகள், கற்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சாந்த்பாக்கில் உள்ள தாஹிர் உசேனின் வீடு, ஆலை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்ட தடயவியல் நிபுணர்கள் முக்கிய தடயங்களை சேகரித்துள்ளனர். இதையடுத்து அவரது ஆலைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments