டெல்லி - வன்முறையால் பாதித்த இடங்களில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆய்வு

0 771

வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மவுஜ்பூரில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் உள்ளிட்ட  இடங்களில் நடந்த போராட்டங்களில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

இதையடுத்து கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஆய்வு செய்தநிலையில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலும் நேரில் பார்வையிட்டு பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments