இஸ்லாமியர் திருமண அழைப்பிதழில் இடம் பிடித்த இந்துக் கடவுள்கள்

0 1832

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இஸ்லாமியர் ஒருவர் தமது மகளின் திருமண அழைப்பிதழில் இந்துக் கடவுள்களின் படங்களை அச்சிட்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மீரட் ஹஸ்தினாபூர் பகுதியை சேர்ந்த முகம்மது சரபாத் என்பவர் வரும் 4 ஆம் தேதி நடக்கும் தனது மகள் அஸ்மா காத்துனின் திருமண அழைப்பிதழில்  கணபதி மற்றும் ராதை-கிருஷ்ணர் படங்களை  அச்சிட்டுள்ளார். மத துவேஷம் சமூகத்தை வேட்டையாடும் வேளையில் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வெளிக்காட்ட இந்த முயற்சி உதவும் என்பது அவரது நம்பிக்கை. இந்த திருமண அழைப்பிதழுக்கு தமது நண்பர்கள் வட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments