கொரானா வைரஸ் பரவுவதாக பீதியை பரப்ப வேண்டாம் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

0 1070

கறிக்கோழி இறைச்சியில் கொரானா வைரஸ் பரவுவதாக தேவையற்ற பீதியை பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், தொடுதிரை, கேமரா ஆகியவற்றை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கால்நடை மருத்துவர் குழு மூலம் பரிசோதனை செய்யப்பட்டு தரமாகவும், சுகாதாரமான முறையிலும் கறிக்கோழிகள் அனுப்பபட்டு வருவதாகத் தெரிவித்தார். வதந்தி பரப்புபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments