க.அன்பழகனை நேரில் சென்று உடல் நிலை குறித்து விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

0 1605

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடல் நிலை குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.

அன்பழகனுக்கு கடந்த 24-ஆம் தேதி, மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் எ.வ.வேலு, வி.ஜி.ராஜேந்திரன், நந்தகுமார், எம்.பி.க்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments