எஸ்.ஐ வில்சனின் மகளுக்கு அரசுப் பணிக்கான ஆணை

0 895

களியக்காவிளையில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் மூத்த மகளுக்கு வருவாய்த்துறை இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

அதன்படி, வில்சனின் மூத்த மகள் ஆன்றீஸ் ரினிஜாவுக்கு வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளருக்கான பணியாணையை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments