நடிகையை வாட்ஸ் அப் குழுவில் ஆபாசமாக பதிவிட்ட புகாரரில் டெலிவரி பாய் உள்ளிட்ட 3 பேர் தலைமறைவு

0 1158

நடிகை காயத்ரி சாய்நாத்தை வாட்ஸ் அப் குழுவில் ஆபாசமாக பதிவிட்ட புகார் தொடர்பாக பீட்சா டெலிவரி பாய் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

வாட்ஸ் அப் குழு வில் தன்னை ஆபாசமாக சித்தரித்து பலர் தொடர்பு கொண்டு தொல்லை கொடுப்பதாக நடிactresகை காயத்ரி தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் டெலிவரி பாய் பரமேஸ்வரன் மற்றும் காயத்ரியிடம் ஆபாசமாக பேசிய சேலம் சக்திவேல், பெங்களூரைச் சேர்ந்த சுந்தரம் சந்திரபோஸ் ஆகிய மூவரையும் போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்தனர்.

ஆனால் விசாரணைக்கு வராமல் தலைமறைவானதால் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் மூவர் மீதும் தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்ணை ஆபாசமாக சித்தரித்தல், பெண் வன்கொடுமை சட்டம், பாலியல் தொந்தரவு அளித்தல், கொலை மிரட்டல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments