சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழப்பு
சிரியாவின் நடந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் குர்திஷ் போராளிகள் குழுக்கள் மீது ரஷ்யா உதவியுடன் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதே சமயம் குர்திஷ் குழுக்களுக்கு ஆதரவாக சிரியா எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை குவித்து வைத்துள்ளது.
இந்த நிலையில் இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் அங்குள்ள பாரா மற்றும் பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல்கள் நடத்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டதாகவும் அறிவித்துள்ளனர்.
Comments