ரூ.1000 கோடி நிதி முறைகேடு செய்து தப்பிச் சென்ற நிசான் முன்னாள் தலைவரை நாடு கடத்தும் முயற்சியில் ஜப்பான்
ஜப்பானில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி செய்து விட்டு லெபனானுக்கு தப்பிச் சென்ற நிசான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷனை நாடு கடத்தும் முயற்சி துவங்கி உள்ளது.
ஜாமினில் வீட்டுக் காவலில் இருந்த கார்லோஸ். ஜப்பானில் இருந்து சரக்கு விமானம் ஒன்றில் மறைந்து லெபனானுக்கு தப்பிச் சென்றார். அவரை மீண்டும் ஜப்பானுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமாக, அந்நாட்டு நீதித் துறை துணை அமைச்சர் ஹிரோயுகி யோஷி (Hiroyuki Yoshiie ) நாளை லெபனான் தலைநகரு பெய்ரூட் செல்கிறார்.
அங்கு லெபனான் நீதி அமைச்சர் ஆல்பர்ட் செர்கானை (Albert Serhan ) சந்தித்து கார்லோசை நாடு கடத்துமாறு வலியுறுத்த உள்ளார். லெபனான்- ஜப்பானுக்கு இடையே குற்றவாளிகளை கைமாறும் ஒப்பந்தம் இல்லை என்பதால், கார்லோசை நாடு கடத்தும் முயற்சி பலிக்குமா என்பது தெரியவில்லை.
Comments