"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அமெரிக்கா , தாலிபன் அமைதி ஒப்பந்தம் - இந்தியா பங்கேற்பு
அமெரிக்காவுக்கும் தாலிபன்களுக்கும் இடையே, நாளை, கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
இதில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. தாலிபன் பிரச்சனையில் ஆப்கன் அரசு எடுக்கும் நிலைப்பாட்டை ஒட்டியே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதா வேண்டாமா என்ற முடிவை இந்தியா எடுக்கும் என முன்னர் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆப்கன் அரசு சார்பில் 6 பேர் அடங்கிய குழுவினர் நேற்று தோஹாவுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு நடத்தப்படும் பேச்சுவார்த்தையில், ஆப்கன் சிறைகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் தாலிபன்களை விடுவிக்கும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments