திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிகாலை ஐந்து 15 மணிக்கு கும்ப லக்கனத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பழம், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் சுவாமி வீதி உலாவும், மார்ச் 8 ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டமும் நடைபெறுகிறது.
Comments