மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் தெருவோரத்தில் குழந்தை பெற்றெடுத்த அவலம்

0 4572

உத்தரப்பிரதேசத்தின் பரைச் நகரில் பேறுகாலத்துக்காக வந்த பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் அவர் தெருவோரத்தில் குழந்தை பெற்றெடுத்த அவலம் நிகழ்ந்துள்ளது.

பரைச் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண் ஒருவர் பேறுகாலத்துக்காக வந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் அந்தப் பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் அலட்சியம் செய்துவிட்டனர்.

இருப்பினும் பேறுகால வலி ஏற்பட்ட அந்தப் பெண், தெருவோரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தார். இது குறித்துத் தகவல் அறிந்த மருத்துவமனையின் தலைமைக் கண்காணிப்பாளர் சிங், குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இருந்தும் அந்தப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY