உலகின் மிகப்பெரிய விமான நிலைய விரிவாக்க பணிகள் முடக்கம்
உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பிரிட்டன் அரசு லண்டன் விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுதளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லண்டன் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பாரீஸ் ஒப்பந்தத்தின் படி செயல்பட பிரிட்டன் அரசு தவறி விட்டதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புகார் அளித்தனர்.
இதற்கு தடை விதித்துள்ள கீழ் நீதிமன்றம் அரசு உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்தது. ஆனால் இறுதி முடிவு பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தான் உள்ளது. இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த அவர், புல்டோசர்கள் முன்பு படுத்து போராட்டம் நடத்தப் போவதாக முன்பு தெரிவித்திருந்தார்.
Comments