கண்ணன் பிறந்த மதுரா நகரில் ஹோலிப் பண்டிகைக் கோலாகலம்
கண்ணன் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா நகரில் வண்ணங்களின் விழாவான ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிவிட்டது.
மதுராவின் பிரசித்தி பெற்ற துவாரகீஷ் ஆலயத்தில் பக்தர்கள் ஒருவருக்கொருவர் வண்ணம் பாய்ச்சி மகிழ்ச்சியடைந்தனர். கண்ணன் புகழ் பாடும் பக்தி கீதங்களை இசைத்தும் நடனமாடியும் அவர்கள் வழிபாடுகளை செய்தனர்
கண்ணனின் திருவுருச் சிலை மீது வண்ணத்தை பூசிய பின்னர் அதனை பக்தர்களிடம் வீசினர் பூசாரிகள். இந்த ஆண்டு மார்ச் மாதம் 9மற்றும் 10ம் தேதிகளில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கான வருகை இப்போதே வடமாநிலங்களில் வண்ணமயமாக நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.
Comments