அங்காளம்மன் குளத்தின் அசுத்தம் நீங்குமா ?

0 2227

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அருகே உள்ள அக்னிக் குளத்தை புனரமைப்பு செய்து பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 13 நாட்களுக்கு நடைபெறும் மாசி பெருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது.

இதையொட்டி நாள்தோறும் திரளான பக்தர்கள் மேல்மலையனூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். தேர் திருவிழா, தீமிதி திருவிழா போன்ற நிகழ்வுகளின் போது கோவிலுக்கு அருகே உள்ள அக்னி குளத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம்.

தற்போது அக்னி குளத்தின் கரையோரங்களில் முதர் மண்டியும், பிளாஸ்டிக் குப்பைகள் மிதந்தும் மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது. இருந்தாலும் பக்தர்கள் வேறு வழியின்றி சகித்துக் கொண்டு குளத்தில் நீராடி செல்கின்றனர். குளத்தின் படிக்கட்டுகளை அடுத்து ஆழமானப் பகுதியாக இருப்பதால் பக்தர்கள் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது

பொலிவிழந்து காணப்படும் அக்னி குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்காளம்மன் கோவில் நிர்வாகம் குளத்தை சீரமைப்பு செய்ய முடியாத நிலை உள்ளது. குளத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொடுத்தால் குளத்தை சீரமைக்க தயாராக உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களில் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அக்னி குளத்தை முழுவதுமாக புனரமைப்பு செய்து, நீராடுவதற்கு ஏதுவாக சிறப்பு இடம் அமைத்து பாதுகாப்பு வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments