கவுன்சிலர் தாஹிர் ஹூசேனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் ஹூசேன் வீட்டில் கலவரத்திற்குப் பயன்படுத்திய ஆசிட் பைகள், கற்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன மேலும் உளவுத்துறை ஊழியர் அங்கித் சர்மாவை கொன்றதாக தாஹிர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கித் சர்மாவின் உடல் டெல்லி கலவரங்களின் போது சாக்கடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. தமது மகன் மரணத்திற்கு காரணம் தாஹிர் ஹூசேன்தான் என்று அங்கித் சர்மாவின் தந்தை குற்றம் சாட்டியிருந்தார்.
இதனையடுத்து அவரை அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது ஆம் ஆத்மி கட்சி. தேசத்தின் பாதுகாப்பு என வரும் போது அரசியலுக்கு இடமில்லை என்று தெளிவுபடுத்திய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தாஹிர் ஹூசேன் குற்றம் செய்திருந்தால் அவருக்கு இரட்டிப்பு தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Comments