இந்தியா அமெரிக்க நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து திரும்பியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சூழல் நிலவுகிறது.
அண்மையில் சீனாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையே 18 மாதங்களாக நீடித்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது. இதே போன்று இந்தியாவும் வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அமெரிக்கா உடன்பாட்டை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர் ஒவ்வொருவரும் தமது ஊதியத்தில் ஒரு பங்கை அந்நாட்டின் சமூக பாதுகாப்புக்காக தர வேண்டியுள்ளது. பத்தாண்டுகள் பணிபுரியாமல் இடையில் இந்தியா திரும்பும் பட்சத்தில் அந்த நபரிடம் சமூகப் பாதுகாப்பு தொகையை அமெரிக்கா திருப்பித் தருவதில்லை. இப்பிரச்சினை மோடி- டிரம்ப் சந்திப்பில் எழுப்பப்பட்டது. விரைவில் இதற்கான சாதமகான பதிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் பேச்சுவார்த்தையின்போது குறிப்பிட்டுள்ளனர். தாம் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கான ஏற்றுமதி 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். பொருளாதார துறைகளில் திறந்த வெளிப்படையான சமன்படுத்தப்பட்ட வர்த்தகத்திற்கு இரு நாடுகளும் உறுதி கொண்டிருப்பதாக பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்.
Comments