சரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்..! போலி வக்கீல்கள் மீது சாடல்

0 34443

நாடகக் காதலை விமர்சிப்பதாக கூறி வெளியாகி உள்ள திரெளபதி படத்தில், திருப்பதியில் உள்ள சட்டகல்லூரிகளில் போலியாக சான்றிதழ் பெற்ற வடசென்னை வழக்கறிஞர்கள் சிலர், 3200 பதிவுத் திருமண மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உண்மை கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் திரெளபதி படம் தமிழ்நாடு முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் மற்றும் செய்தியாளர்களுக்காக திரௌபதி படத்தை இயக்குனர் மோகன்.ஜி பிரத்யேகமாக திரையிட்டுக்காட்டினார்.

 நாடகக் காதல் செய்து பெண்களை ஏமாற்றுவதால் குடும்பங்கள் அழிந்து போகிறது என்றும் அதற்கு காரணமான வில்லன் கும்பலை நாயகன் பழிவாங்குவதும் தான் படத்தின் மூலக்கதை.. படத்தில் வில்லன் வசதியான வீட்டு பெண்களை கரெக்ட் பண்றதுக்கு தன்னிடம் சரக்கும் முறுக்குமாய் 100 பசங்க இருப்பதாக பேசுவதும், அவர்களுக்கு ஜீன்ஸ் பேண்டும் டிசர்ட்டுடன், தங்கசங்கிலியும், இருசக்கரவாகனத்துடன் ஐபோனும் இலவசமாய் கொடுத்து வசதியான வீட்டு பெண்களை காதலிப்பது போல ஏமாற்றி பணம் பறிக்க சொல்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ராயபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் காதலர் மற்றும் காதலர் அல்லாதவர்களுக்கு கூட சட்டவிரோதமாக பணம் வாங்கிக் கொண்டு பதிவு திருமணம் செய்து வைப்பது போலவும், அந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் 3200 பேருக்கு போலி பதிவு திருமணங்கள் நடந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டம் படித்ததாக போலிச் சான்றிதழ் பெற்ற பலர் வழக்கறிஞர்கள் என கூறி வட சென்னையில் கட்ட பஞ்சாயத்துக்கள் செய்வதாக காட்சிப்படுத்தியுள்ளனர். பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் திரெளபதி என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments