போலீஸ் சீருடையில் டிக்டாக்கில் டூயட்..! நடிகையான நர்சால் விபரீதம்

0 6730

போலீஸ் உடையில் காதல் பாடலுக்கு டூயட் பாடிய ஜோடியை காவல்துறையினர் தேடிவருகின்றனர். நடிகையாக மாறிய நர்சால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

போலீஸ் உடையில் ராதிகா என்ற பெயருடன் டிக்டாக்கில் திறமை காட்டி வீடியோ வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகையர் திலகம் இவர்தான்..!போலீஸ் சீருடையில் பணத்தால் எதையும் வாங்க முடியும் என்று பஞ்ச் டயலாக் பேசி வீடியோ வெளியிட்ட போது கூட அவருக்கு சிக்கலில்லை..! காவலர் உடையில் உள்ளவருடன் ஜோடியாக எப்போது காவல் கீதம் பாடினாரோ அன்றே வில்லங்கம் அவரை தேடிச்சென்று சர்ச்சைக்குள் அழைத்து வந்திருக்கின்றது.

அத்தோடில்லாமல் உதவி காவல் ஆய்வாளர் உடையில் உள்ள ஒருவருடன் அந்த பெண் சாதாரண உடையில் செய்த டிக்டாக் வீடியோ ஒன்றும் வெளியானது போலீசுக்கு தினமும் ஆயிரம் பிரச்சனைகளை தீர்க்கும் பணிகள் இருக்க, சிலீப்பர் செல் போல புறப்பட்டு வந்து சிலர் செய்யும் டிக்டாக் சேட்டைகளால் போலீசுக்கு புதிய தலைவலி உருவானது

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐடியில் உள்ள வீடியோக்களை வைத்து அவர் நர்சாக இருந்து துணை நடிகையான ஸ்ரீனிகா என்பதை கண்டறிந்தனர். சினிமாவில் பெண் போலீசாக நடித்துவரும் அவர், லைக்கிற்கு ஆசைப்பட்டு இது போன்ற சேட்டைகளை செய்து வருவது தெரியவந்தது.

உண்மையான காவலர்கள் என நினைத்து சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்கள் பகிரப்படுவதால் காவல்துறையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் காவலர்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பெண்ணோ தனக்கு லைக் வரவில்லை என்ற கவலையில் உள்ளார்.

டிக்டாக்கில் நவரசத்தையும், நடிப்பாக கொட்டுவதாக நினைத்து, கண்ணியமிக்க காவல்துறையை இழிவுபடுத்துவது போல வீடியோ பதிவிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே காவல்துறையினர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..! அதே நேரத்தில் 10 நாள் கழித்து வரும் பிரச்சனையை அடுத்த 10 நிமிடத்தில் வீட்டிற்கு அழைத்து வர நினைத்தால் தாராளமாக டிக்டாக் செய்யலாம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments