500 சவரன் நகை ரூ.18 லட்சம் கொள்ளைக்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்

0 1168

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் வங்கியில் கொள்ளை நடந்திருப்பதாக, வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

கள்ளிப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கியில் சில நாட்களுக்கு முன்பு 500 பவுன் நகை மற்றும் ரூபாய் 18 லட்சம் ரொக்கம் கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில் 11 தனிப்படை விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு இங்கு ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்ததால் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், அதை விலக்கி கொண்டதால் தற்போது கொள்ளை நடந்திருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments