தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே தள்ளுமுள்ளு

0 1084

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டதால், இரு கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அவரது கட்சி சார்பிலான விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க விமானம் மூலம் விசாகப்பட்டினத்திற்கு வந்த, சந்திரபாபு நாயுடுவை வரவேற்க ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

அப்போது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அங்கு குவிந்ததால் இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருதரப்பினரையும் கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், பாதுகாப்பு கருதி சந்திரபாபு நாயுடுவை விமான நிலையத்தில் உள்ள விஐபி காத்திருப்பு அறைக்கு அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments