டெல்லி கலவரம் : பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவு தள்ளிவைப்பு

0 1666

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியோர் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், வன்முறைப் பகுதியில் ராணுவத்தைப் பாதுகாப்பில் ஈடுபடுத்தவும் உத்தரவிடக் கோரி ஹர்ஷ் மந்தர் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதர், 24 மணி நேரத்துக்குள் வழக்குப் பதிவு செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் பட்டேல், ஹர்சங்கர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான துசார் மேத்தா, வழக்குப் பதிவு செய்ய இது உகந்த நேரமில்லை எனவும், பதிலளிக்கக் கூடுதல் காலக்கெடு வேண்டும் எனவும் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், ஏப்ரல் 13ஆம் தேதி பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments