தனியார் மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.127 கோடி நிதி - அமைச்சர்

0 1229

கடந்த 3 ஆண்டுகளில் தனியார் தொண்டு நிறுவனம் பள்ளிக்கல்வித்துறைக்கு 127 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயகொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காஞ்சிபுரத்தில் 18 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை வரும் 4ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments