மலேசியாவின் புதிய பிரதமர் குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படும்
மலேசியாவிற்கான புதிய பிரதமர் குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படும் என, காபந்து பிரதமர் மஹதீர் பின் முகமது தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட அதிகார பகிர்வு தொடர்பான பிரச்சனை காரணமாக, மஹதீர் சமீபத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்வது குறித்து பேசியுள்ள அவர், யாருக்கு பெரும்பான்மை என்பது குறித்து மார்ச் 2-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறினார்.
மேலும், அதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், உடனடி தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் மஹதீர் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை பிடிப்பதில் மஹதீருக்கும், எதிர்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமிற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
Comments