முன்னாள் பாமக பிரமுகர் கொலை வழக்கு - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர், துணைத் தலைவர் ஆஜர்

0 884

முன்னாள் பாமக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் மற்றும் துணைத் தலைவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 12 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், மேலும் ஆறு பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர்.

இந்நிலையில் சென்னையிலுள்ள என்ஐஏ அலுவலகத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் காலிப் மற்றும் துணைத் தலைவர் அன்சாரி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments