இஸ்லாமியர் பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் சிறைப்பிடிப்பு
கோவையில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் இடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களை சிறைப்பிடித்த மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் 4 பேர் மக்களின் ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு என தகவல் பரவியதையடுத்து அவர்களிடம் மக்கள் விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் வில்சன் கேர் என்ற நிறுவன ஊழியர்கள் என்றும் தங்கள் நிறுவனப் பொருட்களின் விளம்பரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கான ஆதாரத்தை நிறுவனத்திடம் காட்ட ஆதார்கார்டு நகல்களை பெற்றதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments