வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் எதிர்பாராத அளவு உள்ளதாக ஐ.நா. அறிக்கை
நவீன காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் இயக்குநர் ஜெனரல், அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர், உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஜிபூட்டி (Djibouti) எரிட்ரியா (Eritrea) தெற்கு சூடான் (South Sudan) உகாண்டா (Uganda),தன்சானியா (Tanzania ) உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தியுள்ள சேதம் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் எதிர்பார்க்காத அளவிலும் மிக அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இந்திய மதிப்பில் 988 கோடி ரூபாய் ($138M) தேவைப்படுவதாக தெரிவித்துள்ள ஐ.நா. நிர்வாகிகள், நிதியளிக்குமாறு உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments