இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு மேலாளர் முன்ஜாமீன் கோரி மனு
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கில் அப்படத்தின் தயாரிப்பு மேலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் தாக்கல் செய்த மனுவில், தொழில் நுட்ப அம்சங்கள் தொடர்பான கிரேன் உள்ளிட்ட உபகரணங்களை இயக்குவதும், பராமரிப்பதும் தன்னுடைய வேலை இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தின் போது தான் உணவு பரிமாற்றத்தை மேற்பார்வையிட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கில் அப்படத்தின் தயாரிப்பு மேலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் தாக்கல் செய்த மனுவில், தொழில் நுட்ப அம்சங்கள் தொடர்பான கிரேன் உள்ளிட்ட உபகரணங்களை இயக்குவதும், பராமரிப்பதும் தன்னுடைய வேலை இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தின் போது தான் உணவு பரிமாற்றத்தை மேற்பார்வையிட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
Comments