250 தமிழக உம்ரா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

0 1809

கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கையாக 250 தமிழக உம்ரா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

250 இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் அல்லாத உமரா யாத்திரையாக சவுதியில் உள்ள மெக்கா-மதீனா செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர். திடீர் என்று சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் அவர்களை ஏற்றாமலேயே இரு விமானங்களும் புறப்பட்டுச்சென்றன.

இதனால், பயணிகளும் வழியனுப்ப வந்த நூற்றுக்கணக்கானோரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஏர்லைன்ஸ் அதிகாரி வந்து, கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கையாக உம்ரா பயணம் வரவேண்டாம் என்று மெக்கா-மெதினா நிர்வாகம் தெரிவித்து இருப்பதாக கூறினார்.

இந்த தகவலால் அவர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், அவர்களது தனியார் பயண ஏற்பாட்டாளர்களும் அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments