18 வயதுக்கு உட்பட்டவர்கள் போராட்டங்களில் பங்கேற்கலாமா? உயர்நீதிமன்றம் கேள்வி ?
போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சேலத்தில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியரும் பங்கேற்றிருப்பதாகவும், தொடர் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்க தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினர். மேலும் அவ்வாறு உத்தரவுகள் இருந்தால் அதனை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Comments