இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை

0 1259

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தியாகராயநகரில் நல்லகண்ணு குடியிருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 1953-ம் ஆண்டு கட்டப்பட்டது.

அது மிகவும் பழுதானதையடுத்து அதில் குடியிருந்தவர்கள் காலி செய்ய தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து தனது வீட்டை காலி செய்வதாக நல்லக்கண்ணு தெரிவித்த நிலையில் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவருக்கு அரசு வீடு தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை நந்தனத்தில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீட்டில் நல்லகண்ணு விரைவில் குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments