நிலுவைத் தொகையை 15 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறு அரசுக்கு Vodafone கோரிக்கை
வோடோபோன் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 15 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடோபோன், உரிமத் தொகை, அலைக்கற்றைக் கட்டணம் உள்ளிட்ட வகைகளில் 57 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதாகத் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இதை மறுத்துள்ள அந்த நிறுவனம் 23ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அதில் கூடுதலாக செலுத்திய வரியான எட்டாயிரம் கோடி ரூபாயைச் கழித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மீதித் தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறும் தொலைத்தொடர்புத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மொத்த வருவாயில் 8 விழுக்காடாக உள்ள உரிமக்கட்டணத்தை 3 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்றும் வோடோபோன் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Comments