சிலியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது போலீசார் தாக்குதல்
சிலியில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியேறியவர்களை வெளியேற்றும் முயற்சியில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
டெமுகோ நகரில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்திருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் டெமுகோ நகர நிர்வாகம் கேட்டதற்கு பொதுமக்கள் மறுப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிக்கு ஜேசிபி இயந்திரத்துடன் அதிகாரிகளும், போலீசாரும் நிகழ்விடத்திற்கு வந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
போலீசாரும், பொதுமக்களும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட போது ஜேசிபி வாகனம் நொறுக்கப்பட்டது. இறுதியில் குடியிருப்புவாசிகள் விரட்டப்பட்டு, அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
Comments