அரசியல் வியூகம் வகுப்பவரான பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு

0 5463

அரசியல் வியூகம் வகுப்பதில் வல்லவர் எனக் கூறப்படும் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரின் வெற்றிக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் இவர் மீது சாஸ்வத் கவுதம் என்பவர் மோதிகாரி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் பாத் பீகார் கி என்னும் பெயரிலான தன்னுடைய கருத்துருவைப் பிரசாந்த் கிஷோர் திருடிப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாத் பீகார் கி என்பது பீகாரை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்காகப் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் இயக்கமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments