கொரானாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகும் என தகவல்
கொரோனாவின் தாக்குதலுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வரும் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள், கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகக் கூறிய அவர்கள், தடுப்பூசிகள் கிடைக்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர்.
நியூயார்க், டெக்ஸாஸ், ஹூஸ்டன் மற்றும் சீனாவில் தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயன்று வருவதாகக் கூறிய ஹூஸ்டன் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பீட்டர் ஹோடெஸ் இது ஒரு சவாலான மற்றும் அச்சுறுத்தலான பணி என்றும், கொரோனாவின் தொற்று தீவிரமாக இருப்பதாகவும், உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Comments