யார் பெரியவர் என்பதை நிரூபிக்க சண்டை போட்ட கொமேடோ டிராகன்கள்

0 2166

இந்தோனேஷிய வனப்பகுதியில் யார் பெரியவர் என்ற என்பதை நிரூபிக்க 4 கொமேடோ டிராகன்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டன.

உலகின் மிகப்பெரிய பல்லி இனமான கொமேடோ டிராகன்கள் இந்தோனேஷிய தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. 10 அடி நீளமும் 80 கிலோ வரை எடையும் கொண்ட இந்த டிராகன்களின் எச்சில், கடும் விஷத்தன்மை கொண்டவை.

இந்நிலையில் கொமேடோ தேசியப் பூங்காவிற்கு வழக்கம் போல பராமரிப்புப் பணிக்குச் சென்ற வனத்துறை ஊழியர் ஒருவர் அங்கு இரண்டு கொமேடோ டிராகன்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அதன் பின்னர் சாவகாசமாக வந்த வேறு இரு டிராகன்களும் இணைந்து மாறிமாறி கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டன. வால்களை மட்டும் ஊன்றிக் கொண்டு சுமார் 8 அடி உயரத்திற்கு எழும்பி நின்று அவைகள் சண்டையிட்டதை வனத்துறை ஊழியர் படம் பிடித்துள்ளார். யார் பெரியவர் என்பதை நிரூபிக்க இதுபோன்று அடிக்கடி சண்டை நிகழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments