இளம் பருவத்தில் ஆபாச இணைய தளங்களை பார்க்காமல் இருப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் - நிதிஷ்குமார்
இளம் பருவத்தில் ஆபாச இணைய தளங்களை பார்க்காமல் இருப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பீகாரில் ஆளுர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா மீது பேசிய அவர், சிறுவர் சிறுமியரிடம் ஆபாச இணையதளங்களால் விளையும் கேடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இத்திட்டத்திற்கு உன்னயான் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இணையத்தில் ஆபாசத் படங்களை செல்போன்களில் மாணவர்கள் கண்டு மனம் பேதலித்து அடிமைகளாக்கப்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்த நிதிஷ்குமார் மத்திய அரசு இத்தகைய இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Comments