சொகுசுக் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்தியர்கள்..22 நாட்களுக்கு பிறகு டெல்லி வருகை

0 1538

ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரசால் சிறைப்பிடிக்கப்பட்ட 119 இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு வந்து சேர்ந்தனர்.

குடும்பத்தினரை விட்டு 22 நாட்கள் அவர்கள் கப்பலில் அடைபட்டுக் கிடந்தனர். 138 இந்தியர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கப்பலில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இதில் நோய் தாக்கிய 16 பேர் டோக்கியோவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 122 பேரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் சில நடைமுறை காரணங்களுக்காக 3 பேரைத் தவிர்த்து 119 இந்தியர்கள் யோகஹோமா துறைமுகத்தில் இருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் முக கவசங்களுடன் ஏர் இந்தியாவின் தனி விமானம் மூலம் இன்று டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments