டெல்லி கலவரம் : சிறப்பான பணியைத் செய்ததாக டெல்லி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

0 5368

டெல்லியில் தலைவிரித்தாடிய வன்முறைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை சிறப்பான நடவடிக்கை எடுத்ததாக டெல்லி உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

அதே நேரத்தில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.காவல்துறைக்கு உத்தரவு நள்ளிரவில் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே காவல்துறையினர் கலவரப் பகுதிகளுக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

செவ்வாய் நள்ளிரவு 12.30 மணிக்கு உயர்நீதிமன்றம் டெல்லி கலவரங்கள் தொடர்பான சிறப்பு விசாரணையை நடத்தியது. கலவரங்களின் போது காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பாதைகளை உருவாக்க காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதற்கு அருகில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின் இடையே முஸ்தபாபாத் மருத்துவமனையில் உள்ள டாக்டர் அன்வர் என்பவரை தொடர்பு கொண்ட நீதிபதிகள், காயம் அடைந்த 200க்கும் மேற்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பற்றி கேட்டறிந்தனர் .இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments