2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் நிறுத்த உத்தரவிடவில்லை - நிர்மலா சீதாராமன்

0 3090

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியன் வங்கி தனது ஏடிஎம் களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை வங்கிகளும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதைக் குறைத்துக் கொண்டு அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளன.

ஆனால் வங்கிகள் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தை நிறுத்துமாறு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றுக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

2016-17ம் ஆண்டுகளளில் 3543 மில்லியன்கள் எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாகவும் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதால் 2018-19ம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 47 மில்லியன்கள் ஆகக் குறைந்து விட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments