கொரோனா வைரஸ்சின் தாக்கங்கள் எப்படி இருக்கும்?

0 7778

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இப்போது காணலாம். 

சார்ஸ் வைரஸ்-க்கான அதே அறிகுறிகளைக் கொண்டிருக்கும் கொரோனா கொலைகார வைரசாக உருமாறி உள்ளது. சாதாரணமாக தலைவலி, மூக்கு ஒழுகுதல், தசைகளில் அதிகப்படியான வலி, சாதாரணமாக மூச்சு விடும்போதே குறட்டை விடுவது போன்ற ஒலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். ஆனால் கொரோனா தாக்கிய பின் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான தொடர் காய்ச்சல், மூச்சு விடுவதில் கடும் சிரமம் போன்றவை ஏற்படும்.

பின் நுரையீரலில் தாக்கம் ஏற்படும் நிம்மோனியா காய்ச்சலின் விளைவாக கை, கால் மூட்டுக்களில் சீழ் பிடித்து மரணம் ஏற்படலாம் என் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை மனிதர்களிடம் இருந்து மட்டுமே மற்ற மனிதர்களுக்கு பரவிவரும் கொரோனாவைத் தவிர்க்க, முகமூடி அணிதல், பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் கைகுலுக்குவதைத் தவிர்த்தல், கைகளை அவ்வப்போது சுத்தமாக கழுவி வைத்திருத்தல் மற்றும் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களிடம் இருந்து விலகியிருத்தல் போன்றவைகளே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நம்மைக் காப்பாற்றும் விஷயங்கள் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments