டெல்லி நிகழ்வுகள் இதயத்தை நொறுக்குகிறது.. யுவராஜ் சிங்

0 2022

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் சேவாக் இருவரும் டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து வேதனை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள யுவராஜ் சிங், டெல்லியில் நடைபெற்று வரும் சம்பவங்கள் இதயத்தை உடைக்கும் வகையில் உள்ளது. தயவுசெய்து அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுங்கள். கலவர சூழலை கட்டுப்படுத்த அதிகாரிகள் சரியான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

நாம் அனைவரும் மனிதர்கள், நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் யுவராஜ்.

டெல்லியில் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. டெல்லியில் வசிக்கும் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் சேவாக். நடக்கும் நிகழ்வுகள் நாட்டின் தலைநகரின் மீது கரையை உண்டாக்கிவிட கூடாது என்றும் கூறியுள்ளார் சேவாக். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments