பிளே ஸ்கூல் போல் மாறிய குழந்தைகள் சிகிச்சை பிரிவு..!
கோவை தனியார் கல்லூரி மாணவர்களின் கை வண்ணத்தால், அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, வண்ணமயமான கருத்தோவியங்களுடன் கூடிய பிளேஸ்கூல் போல் காட்சி அளிக்கிறது.
அரசு மருத்துவமனை என்றாலே துர்நாற்றம், சுகாதார சீர்கேடு என்ற நிலை மாறி, தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் சுகாதாரத்திலும், நவீன சிகிச்சை கருவி வசதிகளுடன் திகழ்கிறது. அதையும் கடந்து கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு ஒரு பிளே ஸ்கூல் போல் மாறியுள்ளது.
கிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவிகள், இங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான சிங்கம், கரடி, யானை, ஒட்டகம் உள்ளிட்ட வன விலங்குகளின் ஓவியங்களையும், சோட்டா பீம், டோரா புஜ்ஜி, சக்திமான், போக்கிமான் உள்ளிட்ட கார்ட்டூன் ஓவியங்களை தீட்டியுள்ளனர்.மேலும் "வானம் 20" என்ற பெயரில் மரம் நடுதலின் பயன், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு படங்களையும், இயற்கை சார்ந்த ஓவியங்களையும், பசுமையை நோக்கி செல்வோம் என்ற வகையில் கருத்தோவியம் தீட்டியுள்ளனர்.
இவை சிகிச்சை பெறும் குழந்தைகளை மகிழ்விப்பதோடு, மருத்துவமனை என்ற நினைப்பே இல்லாத வகையில், நோயின் தாக்கத்தை குறைக்க வழி வகுப்பதாக பெற்றோர் வரவேற்பு தெரிவித்தனர்.
Comments