சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான், மனைவி, மகன் கைது
போலிச் சான்று பெற்ற வழக்கில் சமாஜ்வாதிக் கட்சி மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஆசம்கான், அவர் மனைவி, மகன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆசம்கான் மகன் அப்துல்லா ஆசமுக்கு லக்னோ, ராம்பூர் ஆகிய இரு நகரங்களிலும் பிறப்புச் சான்று பெற்றுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த ஆகாஷ் சக்சேனா என்பவர் புகார் அளித்தார். கல்விச் சான்றில் 1993 என்றும், லக்னோ மாநகராட்சியில் பெற்ற பிறப்புச் சான்றில் 1990 என்றும் பிறந்த ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் ஆசம்கான், அவர் மனைவி தசீன் பாத்திமா, மகன் அப்துல்லா ஆசம் ஆகியோர் ராம்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மூவருக்கும் எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் ஆஜராகித் தங்களைப் பிணையில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் மூவரும் கைது செய்யப்பட்டு 7 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments