தரமற்ற மருத்துவ உபகரணங்களை தயாரித்த 4260 பேர் கைது
கொரானா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் சீன அரசு, அதேவேளையில், நோய்தொற்றை பயன்படுத்தி, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை, கண்டறிந்து, தண்டிக்கும் பணிகளையும், முடுக்கிவிட்டிருக்கிறது.
இந்த வகையில், தரமற்ற முகமூடிகளை தயாரித்து லாபம் பார்த்த சிறு, குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவற்றை விற்பனை செய்தவர்கள் உட்பட நோய் தடுப்பு மருத்துவப் பொருட்களை தயாரித்தவர்களை கண்காணித்து, சீன அரசு கைது செய்து வருகிறது.
தரமற்ற 3 கோடி முகமூடிகள், நோய் தடுப்பு உபகரணங்கள் என 180 கோடி ரூபாய் மதிப்பிலான தரமற்ற மருத்துவ உபகரணங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக, 4260 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சீன உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
Comments