காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பாகமாக என்றும் இருக்கும் - இந்தியா திட்டவட்டம்
காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பாகமாக இன்றும் என்றும் இருக்கும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இந்தியா ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் இம்மாதம் 24 முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடக்கிறது.
இதில் நேற்று பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அங்கு எடுக்கப்பட்ட அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் திரும்பப்பெற வேண்டும் எனவும் பேசினார்.
காஷ்மீரில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று அவர் பேசியதற்கு இன்று பதிலளித்த மேற்குநாடுகளுக்கான இந்திய வெளியுறவுத் துறை செயலர் விகாஸ் ஸ்வரூப் (Vikas Swarup) சர்வதேச பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் இருப்பதாக பதிலடி கொடுத்தார்.
Comments