டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி

0 3561

டெல்லி கலவரத்தின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு டெல்லி மாநில அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.

வடகிழக்கு டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் கொல்லப்பட்டார்.

அவரது உடலில் துப்பாக்கி குண்டு இருந்ததாக உடற்கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ரத்தன்லாலின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் நட்டா ரத்தன்லாலுக்கு தியாகிக்கான கவுரவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அவரது குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments