தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தேசிய சிறப்பு அந்தஸ்து
தஞ்சாவூர் மற்றும் ஹரியானாவில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் மத்திய சட்டங்களை நடைமுறைப்படுத்தவும், வாடகைத்தாய்களுக்கான வழிகாட்டுதல்களை முறைப்படுத்தும், வாடகைத்தாய் சட்ட மசோதா 2020க்கும், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
1480 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தேசிய தொழில்நுட்ப ஜவுளிகள் இயக்கம் தொடங்கவும், இந்தியா-மியான்மர் இடையே ஒத்துழைப்புக்கான 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும், லட்சத்தீவு யூனியன் பிரதேச பழங்குடியின மக்களின் நில உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்திருத்தத்திற்கும், கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Comments