ஐ.சி.சி பேட்டிங் தர வரிசை பட்டியல்: 2-வது இடத்திற்கு சரிந்த விராட் கோலி

0 1616

நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சொதப்பியதால், ஐ.சி.சி பேட்டிங் தர வரிசையில் முதலிடத்திலிருந்து விராட் கோலி, 2 - வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

ஐ.சி. சி டெஸ்ட் தர வரிசை பட்டியலின்படி, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகள் பெற்று, முதலிடம் பிடித்தார். 906 புள்ளிகளை பெற்று, 2 - வது இடத்திற்கு விராட் கோலி சரிய, நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ்சன் 3 - வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இந்திய வீரர்கள் ரகானே 8 - வது இடத்திலும், புஜாரா 9 - வது இடத்திலும், மயங்க் அகர்வால் 10வது இடத்திலும் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments