பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு
பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பலசெல் உயிரினங்களிலும் காற்றுசுவாசம் நடைபெறுவதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் ஒட்டுயிரியை கண்டுபிடித்துள்ளனர்.
சால்மோன் மீனின் தசைசெல்களில் உயிர்வாழும் ஜெல்லிமீன் போன்ற அந்த ஒட்டுயிரிக்கு, ஹெனிகுவா சால்மினிகோலா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அதில் செல்களின் ஆற்றல் நிலையமான மைட்டோகாண்ட்ரியா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைட்டோகாண்ட்ரியா பலசெல் உயிரிகளில் ஆக்சிஜனை வேதி ஆற்றலாக மாற்றும் தலையாய பணியை செய்வதால், காற்றுசுவாசத்திற்கு முக்கியமானதாகும். இந்நிலையில் அவ்வமைப்பில்லாத உயிரியை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments